வினைத்திறனற்ற அமைச்சு செயலாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

Monday, July 11th, 2016

செயற்திறனற்ற அமைச்சு செயலாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைகளை அமுல்படுத்தாத மற்றும் செயற்திறனற்ற அமைச்சின் செயலாளர்கள் மூன்று பேர் தொடர்பில் அரசாங்கம் விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளது.

இதன்படி, அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மூன்று அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட உள்ளது. மேலும் சில அமைச்சின் செயலாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்வி அமைச்சின் செயலாளர், கலாச்சார, வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மற்றும் தொடர்பாடல் அமைச்சின் செயலாளர் ஆகியோர் இவ்வாறு விரைவில் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட மேலும் சில அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரியவருகின்றது.

Related posts: