வினாத்தாள் விவகாரம் – சரணடைந்தார் பிரதான சந்தேகநபர்!

Tuesday, August 29th, 2017

உயர்தர பரீட்சையின் இரசாயனவியல் வினாத்தாள் வௌியான சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான மேலதிக வகுப்பு ஆசிரியர் இன்று மதியம் கம்பஹா நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

சட்டத்தரணியூடாக குறித்த நபர் நீதிமன்றில் சரணடைந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.பின்னர், விடயங்களை ஆராய்ந்த கம்பஹா முதன்மை நீதவான் டீ.ஏ.ருவன் பத்திரண குறித்த மேலதிக வகுப்பு ஆசிரியரை எதிர்வரும் மாதம் 30ம் திகதி விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் , தற்போதைய நிலையில் உயர்தர மாணவரொருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் மாதம் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts: