விநியோகித்த எரிவாயு கொள்கலன்களை மீளப் பெற லிட்ரோ தீர்மானம்!

Wednesday, December 8th, 2021

வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலன்களை மீளப் பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, கடந்த 4 ஆம் திகதிக்கு முன்னதாக வீடுகள் மற்றும் சந்தைக்கு விநியோகிக்கப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலன்கள் தொடர்பில் நுகர்வோர் அதிருப்தி வெளியிட்டிருந்தனர்.

இதற்கமைய, லிட்ரோ நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையிலேயே மேற்படி, திகதிக்கு முன்னதாக விநியோகிக்கப்பட்ட முத்திரை அகற்றப்படாத சமையல் எரிவாயு கொள்கலன்கள் இவ்வாறு மீளப் பெற்றுக்கொள்ளப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: