வித்தியா வழக்கு – 11 , 12 ஆம் சந்தேக நபர்கள் தொடர்பான வழக்கு விசாரணை இன்று

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் 11 ஆம், 12 ஆம் சந்தேக நபர்கள் தொடர்பான வழக்கு விசாரணை இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு மீண்டும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இவ் வழக்கு விசாரணையின் போது 12 ஆவது சந்தேக நபர் தனது சாட்சியத்தினை மன்றில் தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த மே மாதம் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த வித்தியா கடத்திச் செல்லப்பட்டு கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இச் சம்பவம் தொடர்பாக 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
மிக நீண்ட காலமாக குறித்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுதும் இறுதியாக 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 2 பேருக்கும் எதிராக தனியான வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|