வித்தியா படுகொலை வழக்கு தொடர்பான சந்தேகநபர்கள் விளக்கமறியல் நீடிப்பு!

Friday, February 17th, 2017

புங்குடுதீவில் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்கள் 12 பேரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு புங்குடு தீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 12 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த 12 பேரும் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, படுகொலை சம்பவம் இடம்பெற்று இரண்டு ஆண்டுகளாகும் நிலையில், சந்தேக நபர்கள் மீதான குற்றப்பத்திரம் இதுவரை தாக்கல் செய்யப்பட்டவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Vithya