வித்தியா படுகொலை வழக்கு: 12 சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் நீடிப்பு !

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்குட்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 12 சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் எதிர்வரும்-19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய 12 சந்தேகநபர்களும் இன்று புதன்கிழமை(04) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது சந்தேகநபர்களை எதிர்வரும்-19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் எம்.எம். றியாழ் உத்தரவு பிறப்பித்தார்.
Related posts:
15,000 ஹெக்டயரில் பச்சை மிளகாய் செய்கையை அதிகரிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை!
இரண்டு அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தம் - அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!
யாழ்ப்பாணத்தில் புகையிலைச் செய்கை மிகுந்த நம்பிக்கையுடன் முன்னெடுத்துள்ள செய்கையாளர்கள்!
|
|