வித்தியா கொலை: விசாரணைகளை துரிதமாக மேற்கொண்ட பொலிசார் கௌரவிப்பு!

Friday, October 20th, 2017

புங்குடுதீவில் பாலியல்வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட பாடசாலை மாணவி வித்தியாவின் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைதுசெய்வதற்கு சிறந்த முறையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசாருக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.

இதேபோன்ற கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டின் பாதுகாப்பிற்கான மிகஉயர்வான முறையில் பங்களிப்பு செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கும் சிவில் அதிகாரிகளுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டது..

இது தொடர்பான வைபவம் கொழும்பு மேல்மாகாண சபை நுண்கலை கேந்திர நிலையத்தில் சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தலைமையில் இடம்பெற்றது..

Related posts: