வித்தியா கொலை வழக்கு  சந்தேகநபர்களுக்கு மேலும் விளக்கமறியல் நீடிப்பு!

Tuesday, November 29th, 2016

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு, ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் சறோஜினி இளங்கோவன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது 12 சந்தேகநபர்களும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில், சந்தேகநபர்களை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவம் தொடர்பில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Vidya_case

Related posts: