வித்தியா கொலை வழக்கு : சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

Tuesday, August 23rd, 2016

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சந்தேகநபர்களை  எதிர்வரும் செப்டெம்பர் மாதம்06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் எம்.எம். றியாழ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை(23) வித்தியா படுகொலை தொடர்பான வழக்கு மீண்டும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வித்தியா படுகொலைச் சந்தேகநபர்கள் 12 பேரும் இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

Related posts: