வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்களது விளக்கமறியல் நீடிப்பு!

மாணவி வித்தியா கொலைச் சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
வித்தியா கொலை தொடர்பான வழக்கு இன்று (18) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் எம்.எம்.றியாழ் இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார். சந்தேகநபர்கள் 12 பேரும் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணை மேல் நீதிமன்றிற்கு மாற்றப்பட்டு, சந்தேகபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுமென கடந்த வழக்கு விசாரணையின் போது நீதவான் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மதிப்பீட்டு அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை!
வீதிகளுக்கான பெயர்கள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மாத்திரம் - பிரதமர் அலுவலகம்!
அரைசொகுசு பேருந்து சேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள 430 அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்ய நீதிமன்றம் இடை...
|
|