வித்தியா கொலை தொடர்பிலான விசாரணைமன்றின் 2ஆம் கட்ட விசாரணைகள் ஆரம்பம்!

Tuesday, July 18th, 2017

படுகொலை செய்யப்பட்ட புங்குடுத்தீவைச் சேர்ந்த மாணவி வித்தியாவின் விசாரணைமன்று அடிப்படையிலான இரண்டாம் கட்ட சாட்சிப் பதிவுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன

கடந்த 28ம் திகதி ஆரம்பமான இந்த விசாரணைமன்றில் 10 சாட்சியாளர்கள் சாட்சி வழங்கியுள்ள நிலையில், மேலும் 40 பேர் சாட்சியமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஆரம்பமான சாட்சிப் பதிவுகள் எதிர்வரும் 26ம் திகதி வரையில் நடைபெறும்வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான இந்த விசாரணைமன்றில், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்

Related posts: