வித்தியாவின் தாயார் கோரிக்கை..!

Monday, April 4th, 2016

புங்குடுதீவில் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் தாயார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்..

எனது மகளின் கொலைக்கு விரைவில் நீதியை பெற்றுத் தாருங்கள் என இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

யாழ்ப்பாணம், புங்குடுதீவில் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வித்தியாவின் தாயாரை ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் சந்தித்திருந்த போது தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு கருதி வவுனியாவில் வீடொன்றை பெற்றுத்தருமாறு கோரியிருந்தார்.இந்த நிலையில், வவுனியா, குருமன்காடு, சிங்கள பிரதேச செயலக வீதியில் வீடு அமைக்கப்பட்டு கையளிக்கும் நிகழ்வு இன்று மதியம் இடம்பெற்றது.

இதனை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், வித்தியாவின் தாயார் மற்றும் சகோதரர்களிடம் கையளிக்கும் போதே இந்த கோரிக்கையை முன்வைத்திருந்ததுடன் மகளின் கொலை தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தி குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்க வேண்டும் எனவும் கண்ணீர் மல்க கோரியிருந்தார்.


இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 9000 வெற்றிடங்கள்!
தகவலறியும் சட்டமூலத்தின் அடுத்தகட்ட விரைவில் நகர்வுகள் !
பிரச்சினைகள் பலவற்றில் இருந்து மீண்டௌ முடிந்துள்ளது - அமைச்சர் மங்கள சமரவீர!
மாலைத்தீவில் இலங்கை பல்கலைக்கழக வளாகங்கள் !
போக்குவரத்து திணைக்கள அலுவலகங்களுக்கு அருகாமையில் நடமாடும் தரகர்களை கைது செய்ய நடவடிக்கை - அமைச்சர் ...