விதை நெல்லுக்குப் பற்றாக்குறை : நெற்செய்கையாளர்கள் பாதிப்பு!

இந்த ஆண்டின் காலபோக நெற்செய்கையின் போது விதை நெல்லுக்குப் பெரும் பற்றாக்குறை ஏற்படலாம் என்று செய்கையார்கள் தெரிவிக்கின்றனர்.
2017 ஆம் ஆண்டின் காலபோக நெற்செய்கையின் போது கடுமையான வறட்சி மற்றும் மழைகாலம் தாழ்த்திப் பெய்தமை போன்ற காரணங்களால் செய்கையாளர்கள் அதிக விளைச்சலைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை.
இதன் தாக்கத்தினால் இம்முறை காலபோக நெற்செய்கையின் போது விதை நெல்லுக்குப் பற்றாக்குறை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கு மாவட்ட விவசாய திணைக்களம் விதை நெல்லை கொள்வனவு செய்து செய்கையாளர்களுக்கு வழங்கவும் தீர்மானித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேசமயம் தற்போது நெல்லின் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளதால் செய்கையாளர்கள் தமது கையிருப்பில் நெல்லை விற்பனை செய்து வருகின்றனர்.
குறிப்பாக எழுபது கிலோ மொட்டைக் கறுப்பன் நெல் நான்காயிரம் ரூபாவுக்கு அதிகமாக விற்பனையாகின்றது.
பிஜி 406, ஓரி 302 ஆட்டக்காரி போன்ற இன நெல் (எழுபது கிலோ நிறையுடையது) மூவாயிரம் ரூபாவுக்கு அதிகமாகவும் விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|