விதிமுறைகளை மீறும் வேட்பாளர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை – மஹிந்த தேசப்பிரிய!

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் விதிமுறைகளை மீறும் வேட்பாளர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்வுகள் இடம்பெற்று முடிந்தபின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு வேட்பு மனு தாக்கல் செய்த அனைத்து வேட்பாளர்களுக்குமான தேர்தல் விதிமுறைகளும் நிபந்தனைகளும் மஹிந்த தேசப்பிரியவால் வாசிக்கப்பட்டது.
அத்துடன் தேர்தல்கள் தொடர்பில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் பின்பற்ற வேண்டியதும் கட்டாயமானதுமானதுமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புதிதாக 3000 மொழிபெயர்ப்பு அதிகாரிகள் நியமனம்!
கொரோனாவை தொடர்ந்து சீனாவினை புரட்டி எடுக்கும் கனமழை!
விசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு - குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவிப்பு!
|
|