விதிமுறைகளை மீறிய 50 பேருந்துகளின் பயண அனுமதிப்பத்திரம் இரத்து – போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத 50 பேருந்துகளின் பயண அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத பேருந்துகள் தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்துவதாகவும் போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனவரி மாதம்முதல் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் நடவடிக்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை வியட்நாமிற்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மலையக தமிழரின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு இந்தியா தொடர்ந்தும் உதவியளிக்கும் - இந்திய வெளிவிவகார அமைச்ச...
யாழ்ப்பாணம் தீவக காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கு 12 மில்லியன் டொலரை நன்கொடையாக வழங்க...
|
|