விதிகளை மீறும் சாரதிகளுக்கான தண்டப்பணம் தொடர்பாக கவனம் செலுத்த முடிவு!

சாரதித்துவத்தின்போது போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக விதிக்கப்படும் தண்டப்பணம் தொடர்பில் கவனம் செலுத்த நீதிபதிகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
தற்போது அதிகரித்துவரும் விபத்துக்கள் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கொதாகொட தெரிவித்துள்ளார்.மேலும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் விபத்துக்களின் அளவு குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
நாளை மதுபான கடைகளுக்கு பூட்டு!
இறுதி தீர்மானம் மேற்கொள்ள தோட்டக் கம்பனிகளுக்கு ஒருவார காலம் அவகாசம் - அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்...
வன்முறையில் ஈடுபட வேண்டாம் - ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நாமல் ராஜபக்ஷ விடுத்த முக்கிய கோரிக்கை!
|
|