விதிகளை மீறிய 13,320 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Sunday, April 4th, 2021

கடந்த ஒரு வார காலப்பகுதியில் உந்துருளி விதி மீறல்கள் தொடர்பில், 13,320 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

உந்துருளி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதிமுதல் விசேட சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, தலைக்கவசம் தொடர்பில் 1,977 பேருக்கும், அனுமதி பத்திரம் தொடர்பில் 1,303 பேருக்கும், மதுபோதையில் உந்துருளி செலுத்தியமைக்காக 398 பேருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கவனயீனமாக உந்துருளி செலுத்தியமைக்காக 139 பேருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, 450 உந்துருளிகளை பொலிஸார் கையகப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts: