விண்ணப்பங்கள் ஏற்கும் காலம் இன்றுடன் நிறைவு – தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம்!

Tuesday, March 17th, 2020

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை கையளிப்பதற்கான காலம் இன்று(17) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த கால அவகாசம் நேற்றுடன் நிறைவடையவிருந்த நிலையில், அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டதன் காரணமாக அந்த செயற்பாடு இன்றைய தினம் வரை நீடிக்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 6, 8, மற்றும் 9 தினங்களில் இடம்பெறவுள்ளது. இதனிடையே, பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் செயற்பாடு நாளை மறுதினம் நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது

Related posts: