விடைபெற்றுச் செல்லும் ஆண்டின் மிகப்பெரிய கடனாளி  ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!

Sunday, January 1st, 2017

2016ஆம் ஆண்டு வணிக வங்கிகளில் அதிகளவான கடன் பெற்ற நிறுவனமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை பெயரிடப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் நிறுவனம் பெற்றுக் கொண்டுள்ள கடனின் பெறுமதி 561 கோடி ரூபாய் என தெரிய வந்துள்ளது.

அந்த பட்டியலில் 400 கோடி ரூபாய் கடன் பெற்ற நிறுவனமாக இலங்கை உர நிறுவனம் பெயரிடப்பட்டுள்ளது. மூன்றாம் இடத்தினை கொழும்பு வர்த்தக உர நிறுவனம் பெற்றுள்ளது. அந்த நிறுவனம் 400 மற்றும் 340 கோடி ரூபாய் வரை கடன் பெற்றுள்ளது.

இதேவேளை கடன் பெற்ற பட்டியலில் நான்காம் இடத்தினை கப்பல் நிறுவனம் பிடித்துள்ளது. அதன் கடன் பெறுமதி 340 கோடி ரூபாய் என குறிப்பிடப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கி அறிக்கைகளுக்கமைய 2016ஆம் ஆண்டின் முதல் 8 மாதத்தில் மாத்திரம் அரச கூட்டுத்தபானங்கள் வணிக வங்கிகளில் 8,150 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

6c7dab55d28c7d76499a6e96416a9c5c

Related posts: