விடுமுறை காலப்பகுதியிலும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் விநியோகம்!
Tuesday, December 13th, 2016விடுமுறைக் காலப்பகுதியிலும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் புத்தக வெளியீட்டு ஆணையாளர் நாயகம் பத்மினி நாலிகா வெலிவத்த தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் மாணவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்களில் 91 சதவீதம் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
இந்த விடுமுறை காலப்பகுதியில் பரீட்சை நடைபெறும் மத்திய நிலையங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
பாடசாலைப் புத்தகங்களை விநியோகிக்கும் தேசிய வைபவம் ஜனவரி மாதம் 5Mம் திகதி ஸ்ரீ ஜயவர்ததனபுர கோட்டே ஆனந்த சாஸ்திராலிய வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது என்று குறிப்பிட்ட அவர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார். கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடப்புத்தகங்களின் இரண்டாவது பகுதிக்கான புத்தகங்களை விநியோகிக்கும் முதல் கட்ட நடவடிக்கை இடம்பெற்ற பின்னர், இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|