விடுமுறை காலத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டமை சட்டரீதியானதா? – விளக்கம் கோரி சட்ட மா அதிபரிடம் செல்கிறது தேர்தல் ஆணைக்குழு!

Sunday, May 3rd, 2020

2020 ஆம் ஆண்டுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டமை சட்டரீதியானதா என சட்ட மா அதிபரிடம் தேர்தல் ஆணைக்குழு ஆலோசனை கோரியுள்ளது.

2020 ஆம் ஆண்டின் பொது தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் விடுமுறை காலத்திலேயே தாக்கல் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டடிருந்தது. இவ்வாறு செய்ய முடியுமா என்பது குறித்து எழுந்த கேள்விகளைத் தொடர்ந்தே தேர்தல் ஆணைக்குழு இவ்வாறு ஆலோசனை கோரியுள்ளது.

முன்பதாக கொரோனா வைரஸ் தொற்றுகை பரவுவதனை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் 17, 18 மற்றும் 19ம் திகதிகளை அரசாங்கம் பொது விடுமுறைக் காலமாக வர்த்தமானி ஊடாக அறிவித்திருந்தது.

இந்த பின்னணியில் இவ்வாறான ஓர் நிலைமை கடந்த காலங்களில் ஏற்பட்டதில்லை என்ற காரணத்தினால் சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் இது குறித்து ஆலோசனை பெற்றுக்கொள்ள தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்து ஆலோசனை கோரியுள்ளது என தெரியவருகின்றது.

Related posts: