விடுமுறையில் சென்று திரும்பும் பொலிஸாரை 7 நாட்கள் தனித்திருக்க செய்யுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்து!

Wednesday, May 20th, 2020

ஒரு நாள் ஓய்வின் அடிப்படையில் விடுமுறையில் சென்று மீண்டும் பணிக்கு திரும்பும் பொலிஸ் அதிகாரிகளை சில நிபந்தனைகளின் கீழ் கடமையில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டாம் என பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரத்ன, பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக பொலிஸாரின் விடுமுறைகளை இரத்துச் செய்ய அண்மையில் தீர்மானிக்கப்பட்டது. எனினும் நிபந்தனைகளின் அடிப்படையில் ஒரு நாள் ஓய்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு ஓய்வில் இருந்து மீண்டும் கடமைக்கு திரும்பும் பொலிஸ் அதிகாரிகளை இரண்டு நாட்கள் தனித்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு இதற்கு முன்னர் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

எனினும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய 7 நாட்கள் அதனை நீடிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: