விடுமுறையின் பின்னர் மேல் நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்!

Wednesday, January 6th, 2021

வருட இறுதி விடுமுறையின் பின்னர் மேல் நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் இன்றுமுதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.

எவ்வாறாயினும், நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டாலும், சுகாதார ஆலோசனைகளின் பிரகாரம், சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெறும் என அனைத்து தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மேல் நீதிமன்ற தகவல்கள் கூறுகின்றன.

அத்துடன் வழக்கு விசாரணையின் போது, அவசியமான நபர்கள் மற்றும் அதிகாரிகளை மட்டும் நீதிமன்றுக்குள் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போதைய கொரோனா பரவல் அச்சுறுத்தல் நீங்கும் வரையில், சந்தேக நபர்களை ஸ்கைப் ஊடாக மேற்பார்வைச் செய்தல், உள்ளிட்டவை தற்போதும் பின்பற்றப்பட்டுவரும் சுகாதார பாதுகாப்பு வழி முறைகளைப் பின்பற்றியே நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவுள்ளது

கொழும்பு பிரதான நீதிவான், மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பங்கேற்புடன், சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே இந்த இணக்கம் எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: