விடுதிகளிலிருந்து வெளியேறும்படி விஞ்ஞான பீட மாணவர்களுக்கு அறிவிப்பு! –  பல்கலைக்கழக நிர்வாகம்!

Sunday, July 17th, 2016

யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டிருப்பதாகவும் விஞ்ஞான பீட மாணவர்களை, விடுதிகளிலிருந்து தற்காலிகமாக வெளியேறுமாறும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இரு மாணவர்கள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த மோதல் சம்பவத்தில் ஆறு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் மாணவர்கள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அங்கு மோதல் நிலமை ஏற்பட்டிருந்தது. இந்த மோதலில் துவிச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கில்கள் என்பன சேதமாக்கப்பட்டதுடன், பல்கலைக்கழகக் கட்டடங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. பின்னர் பொலிஸார் அங்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

Related posts: