விடுதலை செய்ய வேண்டாம் : நீதிபதி இளஞ்செழியன்

Thursday, November 23rd, 2017

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டாம் என, நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் தீவிரமடைந்துள்ள வாள்வெட்டு மற்றும் சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலிஸார் விசேட பாதுகாப்பு திட்டத்தை அமுல்படுத்தினர். இதன் போது சந்தேகத்தின் பேரில் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் இளைஞர்களை விடுவிக்க வேண்டாம் எனவும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் யாழ். உயர் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் யாழ்ப்பாண பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதி இளஞ்செழியன் மற்றும் யாழ். பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் யாழ்ப்பாண உயர் நீதிமன்ற மாநாட்டு மண்டபத்தில் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலுக்கு வடமாகாண பொறுப்பதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.கடந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமை காரணமாக அந்த பகுதி மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

இதனால் பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்படுபவர்களை விடுவிக்காமல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.தற்போது ஏற்பட்டுள்ள அச்ச நிலையை இல்லாமல் செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் இதன்போது உத்தரவிட்டார்.

Related posts: