விஜேதாஸ ராஜபக்ஷ – ஜுலி சங்கிற்கும் இடையில் சந்திப்பு – நாட்டின் தற்போதைய பொருளதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து விரிவாக ஆராய்வு!

Friday, June 3rd, 2022

நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு உதவுவதன் முக்கியத்துவம் குறித்து, அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கிற்கும் இடையே கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனங்களை பலப்படுத்துவதன் மூலம் இலங்கையில் ஜனநாயகம் பலமடைவதாக அமெரிக்க தூதுவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், இலங்கைக்கான சீன தூதுவர் ஸி சென்ஹொங், ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவையும் நேற்று சந்தித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: