விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது 63 ஆக நீடிப்பு – சுகாதார அமைச்சின் தீர்மானம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிப்பு!
Thursday, June 29th, 2023விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடிக்கும் சுகாதார அமைச்சின் தீர்மானம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது
அரச சேவையில் ஈடுபடும் விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிக்கும் குறித்த தீர்மானம் பிரேரணை ஒன்றின் ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சின் செயலாளர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
மேலும், அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய அரசாங்கத்தினால் பணிபுரியும் விசேட வைத்தியர்களின் சேவைக்காலம் 63 வயது வரை நீடிக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் தனது பிரேரணையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த மனுவை செப்டம்பர் 1 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன்பிடித்த மீனவர்கள் 10 பேர் கைது!
மன்னாரை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை - செப்டம்பர் 15 முதல் தலைமன்னார் - கொழும்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொறுப்பின் கீழ் சுற்றாடல் அமைச்சு - வெளியானது அதிவிசேட வர்த்தமானி அற...
|
|