விசேட விடுமுறையான இன்று வழமைபோன்று வங்கி மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களங்களின் சேவைகள் !

Monday, April 12th, 2021

அரசாங்கத்தால் இன்று திங்கட்கிழமை விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் வங்கி மற்றும் – வர்த்தக நடவடிக்கைகள் வழமைபோன்று தமது சேவைகளை முன்னெடுத்திருந்தன.

முன்பதாக மக்களின் வசதி கருதி இந்த விடுமுறை வழங்கப்பட்டதாக அரச சேவைகள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்திருந்தார்.

எனினும் வங்கி அல்லது வர்த்தக விடுமுறைக்கு இந்தத் தினம் பொருந்தாது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதேநேரம் புது வருடத்தை முன்னிட்டு விசேட பொது விடுமுறை தினமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளும் இன்றையதினம் வழமைபோன்று இடம்பெற்றதாகவும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுமித் அளககோன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: