விசேட பண்ட – சேவை வரியினை நேரடியாக பெறுவதற்கு திறைசேரிக்கு அதிகாரம் – பணிகளை முன்னெடுக்க பிரதி செயலாளர் ஒருவரம் நியமனம்!

Sunday, January 9th, 2022

முன்மொழியப்பட்ட விசேட பண்ட மற்றும் சேவை வரியினை நேரடியாக பெறுவதற்கு திறைசேரிக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.

அதேபோன்று திருத்தப்பட்ட பெறுமதி சேர் வரியினையும் திறைசேரி நேரடியாக அறவிட முடியும். இந்த பணிகளுக்காக திறைசேரி செயலாளரினால் பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு அந்த பணிகளை முன்னெடுக்க பிரதி செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் விசேட பண்ட மற்றும் சேவை வரியினை அறவிடும் பிரிவின் நிர்வாகம், வரிசேகரிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் உத்தேச அதிகாரியின் கீழ் செயல்படும். அத்துடன் இந்த பணிகளுக்காக தேவைப்படும் பணியாளர்கள் நிதி அமைச்சில் இருந்து பெறப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட பண்ட மற்றும் சேவை வரி, திருத்தப்பட்ட பெறுமதி சேர் வரி தொடர்பான பிரேரணை ஏலவே பாதீட்டில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய மதுவரி, சுங்கம், வாநூர்தி நிலையம் மற்றும் துறைமுகங்கள் போன்றவை புதிய முறைமைக்கு அமைய மேற்கொள்ளப்படும்.

இதுதவிர, நிதி தொழில்துறை, மகிழுந்து இறக்குமதி, புகையிலை மற்றும் மதுபானம் ஆகியனவற்றிற்கான திருத்தப்பட்ட பெறுமதி சேர் வரி 3 சதவீதத்தால் அதிகரிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: