விசேட தேவையையுடைய மாணவர்களுக்கு புலமைப்பரிசில்  – கல்வி அமைச்சு!

Thursday, August 3rd, 2017

விசேட தேவையையுடைய மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கல்வி, கலை, புதிய படைப்புக்கள் என்பன பற்றி திறமையை வெளிப்படுத்தும் மாணவர்களின் திறமையை மேம்படுத்தி, நாட்டின் அபிவிருத்திக்காக அவர்களின் பங்களிப்புக்களை பெற்றுக் கொள்வதே இதன் இலக்காகும்.புதிய படைப்புக்கள், கலை செயற்பாடுகள், விளையாட்டு ஆகிய துறைகளில் இதற்காக விண்ணப்பிக்கலாம். தரம் 12இல் கல்வி கற்கும் விசேட தேவையையுடைய மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இவர்களுக்கு 20 மாதங்களுக்கு 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 20 புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான மேலதிக தகவல்களையும், விண்ணப்பங்களையும் கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

Related posts: