விசேட தேவையுடையோரை சேவைக்கு அழைப்பதில் அசௌகரியம் : மேலும் இரண்டு வாரங்களுக்கு தாமதப்படுத்துமாறு பார்வைத்திறன் குறைபாடுடைய மக்கள் சங்கத்தின் தலைவர் கோரிக்கை!

கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், பார்வைத்திறன் குறைபாடுடையவர்கள் மற்றும் விசேட தேவையுடையோர்களை சேவைக்கு அழைப்பதில் பல அசௌகரியங்கள் எதிர்நோக்கப்படுவதாக பார்வைத்திறன் குறைபாடுடைய மக்கள் சங்கத்தின் தலைவர் சமீர புபுது குமார தெரிவித்துள்ளார்.
தற்போது வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலானவர்களே பொதுப் போக்குவரத்து மார்க்கங்களில் பயணிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், பார்வைத்திறன் குறைபாடுடையவர்கள் மற்றும் விசேட தேவையுடையோர்களுக்கு பயணத்தின் இடைநடுவே பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில் பார்வைத்திறன் குறைபாடுடையவர்கள் மற்றும் விசேட தேவையுடையோர்களை சேவைக்கு அழைப்பதை மேலும் இரண்டு வாரங்களுக்கு தாமதப்படுத்துமாறு பார்வைத்திறன் குறைபாடுடைய மக்கள் சங்கத்தின் தலைவர் சமீர புபுது குமார கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|