விசேட தெரிவுக்குழு மீண்டும் நாளை கூடவுள்ளது!

Monday, June 17th, 2019

ஏப்ரல் 21 இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் முன்னாள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறவுள்ள விசேட தெரிவுக்குழு அமர்வின் போது மேலும் ஒரு அமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவுக்குழு தலைவர் பிரதிசபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

நாளை செவ்வாய்க்கிழமை மீண்டும் விசேட தெரிவுக்குழுவின் அமர்வு இடம்பெறவுள்ளது.பிற்பகல் 02 மணியளவில் தெரிவுக்குழுவில் சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக பிரதிசபாநாயகர் தெரிவித்தார்.

தம்மிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க மேலும் ஒரு அமைப்புக்கும் சாட்சியங்களை பதிவு செய்வதற்கு அவகாசமளிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் தெரிவித்தார்.

பகிரங்கமாக தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறும் என தெரிவித்த பிரதிசபாநாயகர் சிலபோது இடைக்கால அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதனை தெரிவுக்குழுவே தீர்மானிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரச அதிகாரிகள் அழைக்கப்பட்டமை தொடர்பில் சர்ச்சைகள் இல்லை என தெரிவித்த தெரிவுக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, அதிகாரிகள் அழைக்கப்படுவதற்காக பெயர்ப்பட்டியலின் பிரகாரம் இது தொடர்பில் எதிர்காலத்தில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Related posts:


பொருளாதார மத்திய நிலையத்திற்கான உரிய இடத்தை தீர்மானிக்க முடியாதவர்களால் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை...
60 வயதுக்கு மேற்பட்ட 85 ஆயிரம் பேர் தடுப்பூசிகளை இருவரை பெற்றுக்கொள்ளவில்லை 20 ஆயிரத்திற்கும் அதிகமா...
வெளியானது அதிவிசேட வர்த்தமானி - பலத்த இராணுவ பாதுகாப்புடன் அலரி மாளிகையில் இருந்து வெளியேறினார் முன்...