விசேட தினம் கிடையாது: ஆட்களை பதிவு செய்யும் ஆணையாளர் நாயகம்!

Sunday, November 25th, 2018

நடைபெறவுள்ள க.பொத சாதாரண பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அடையாள அட்டைகனை விநியோகிக்கும் பணி பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இம்முறை தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்காக விசேட தினம் அறிவிக்கப்பட மாட்டாது என்று.ஆட்களை பதிவு செய்யும் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

தற்பொழுது புதிதாக தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்காக மூன்று இலட்சத்து 90 ஆயிரம் விண்ணப்பங்கள் திணைக்களத்திற்கு கிடைத்துள்ளன.

இதுவரையில் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் அல்லது அதி;ல் ஏதெனும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என எண்ணுவோர் திணைக்களத்திற்கு வருகை தந்து அவற்றை தயார் செய்து கொள்ளுமாறு ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: