விசேட தடுப்பூசி செலுத்தும் வாரம் ஆரம்பம் – இரவு 8 மணி வரை தடுப்பூசி மையம் செயல்படும் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Wednesday, January 12th, 2022

இன்றுமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விசேட தடுப்பூசி செலுத்தும் வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் மேலதிகமாக நான்கு தடுப்பூசி மையங்களை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தடுப்பூசி செலுத்தப்படும் அனைத்து மருத்துவமனைகளிலும் இரவு 8 மணி வரை தடுப்பூசி மையம் செயல்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: