விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை !

Monday, November 21st, 2016

நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ள நிலையில் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் ஒன்றறை முன்னெடுப்பதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார்

இதேவேளை, மேல் மாகாணத்தில் கூடுதலாக டெங்கு பரவும் அபாயம் காணப்படுவதால் பரீட்சை நிலையங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த சாதாரண தரப் பரீட்சை இடம் பெறவுள்ள நிலையங்களை சூழவுள்ள பகுதிகளில் டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்காக புகை விசுறும் நடவடிக்கைகளை கல்வி அமைச்சின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டுள்தாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சகல பிராந்திய சுகாதாரப் பிரிவுகளையும் தெளிவுப்படுத்தியுள்ளதாகவும் 2016ஆம் ஆண்டு, அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளர்கள் பதிவாகக்கூடிய ஒரு ஆண்டாக காணப்படுவதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் கூறியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

dengu 123658

Related posts: