விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை – தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு!

நாளைமுதல் (07) எதிர்வரும் 10ஆம் திகதிவரை நாடு முழுவதும் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்காக முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்பும் பெறப்படவுள்ளதாகவும் கூறப்படவுள்ளது.
முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளை முன்னிட்டு மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு கடந்த 7 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்புப்பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதன்போது, 96,351 இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 19,825 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 423 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை வருடத்தின் கடந்த 4 நாட்களில் மேல் மாகாணத்தில் 485 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|