விசேட அறிக்கையை வெளியிடவுள்ளார் நீதி அமைச்சர்!

Friday, August 18th, 2017

நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச எதிர்வரும் திங்கட்கிழமையன்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹம்பாந்தோட்டை துறைமுக குத்தகை தொடர்பில் அமைச்சரவை தீர்மானத்துக்கு எதிராக கருத்து வெளியிட்டார் என்று கூறி நேற்று அவர் சார்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மத்தியக் குழுகூட்டத்தில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டது.

இந்தநிலையில் அவர் தமது நிலைப்பாட்டை விளக்கி அவர் எதிர்வரும் திங்கட்கிழமையன்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்.இந்த அறிக்கைக்கு முன்னர் அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

Related posts: