விசாரணைகள் முழுமையடையாததால், பதவியில் இருந்த காலத்தில் ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியாமல் போனது – சட்டமா அதிபர் அறிவிப்பு!

Sunday, May 16th, 2021

விசாரணைகள் முழுமையடையாததால், பதவியில் இருந்த காலத்தில் ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியாமல் போனதாக சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அத்திணைக்கள ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷார ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

2019 ஏப்ரல் 21 தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்கள் மீதான விசாரணையை சிஐடி இன்னும் முடிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஏ பிரிவில் 42 சந்தேக நபர்களுக்கு எதிரான சாட்சியங்களை உறுதிப்படுத்துமாறு விளக்கம்கோரி சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 71 சந்தேக நபர்களைத் தவிர, 2019 ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பாக வேறுயாரும் விசாரணைக்கு உட்படுத்த்ப்படுகின்றார்களா என்றும் அவர் பொலிஸ்மா அதிபரிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: