விகாரையில் பாரிய தீப்பரவல்!

Friday, May 17th, 2019

மொரட்டுவை – கட்டுபெத்த வீதியில் உள்ள ஸ்ரீ ஞானவிமலாராம விகாரையில் உள்ள இரண்டு மாடி கட்டிடமொன்றில் இன்று காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீப்பரவலால் அந்த கட்டிடத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீப்பரவலை மொரட்டுவை பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள் ஆகியோர் இணைந்து அணைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மின்சார கசிவால் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related posts: