வாழ்வின் எழுச்சி சமுதாய வங்கிகள் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடு!

Saturday, April 9th, 2016

வாழ்வின் எழுச்சிச் சமூதாய அடிப்படை வங்கிகள் மற்றும் சங்கங்கள் எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.

“எமது பாரம்பரியத்தைப் பேணுவோம் …. சிக்கனம் காப்போம்…..” எனும் தொனிப் பொருளில் சித்திரைப்ப் புத்தாண்டு வேலைத் திட்டத்தையும், சிங்கள, தமிழ் சம்பிராதயங்களுடன் கூடிய கிராமிய விளையாட்டுப் போட்டிகளையும் நடாத்தவுள்ளன.

சித்திரை மேம்பாட்டு வாரம் எதிர்வரும்-14 ஆம் திகதி முதல் எதிர்வரும்-20 ஆம் திகதி வரை இடம்பெறும். இக் காலப் பகுதியில் களப் பிரிவு உத்திய்யோகத்தர்கள் ஆகக் குறைந்தது 80 ஆயிரம் ரூபா சேமிப்பைப் பெற்று வைப்பிலிட வேண்டும். கூடுதலாக சேமிப்புச் செய்யும் உத்தியோகத்தர்கள் கெளரவிக்கப்பட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.

பயனாளிகளிடம் எவ் விதமான வற்புறுத்தல்களோ, நிபந்தனைகளோ விதிக்காது விழிப்புணர்வை ஏற்படுத்திச் சேமிப்புக்களை ஏற்படுத்துமாறு வாழ்வின் எழுச்சி அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை , எதிர்வரும் -14 ஆம் திகதி வாழ்வின் எழுச்சிச் சமூதாய அடிப்படை வங்கிகளில் வாடிக்கையாளர் சேவைகள் இடம்பெற்றுக் கைவிசேடம் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: