வாழ்வாதார முதலீடாக உள்ள முச்சக்கர வண்டி சேவை மக்கள் மனதை வென்ற சேவையாக உருவாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி என்றும் துணையாயிருக்கும்!

Sunday, July 10th, 2016

யாழ்.மாவட்ட முச்சக்கரவண்டிச் சங்க சாரதிகள் தமது சங்கத்தின் பிரதிநிதித்துவ சீருடையையும் முச்சக்கரவண்டிகளுக்கான மீற்றர்களையும் பொருத்தி சேவையில் ஈடுபடுவதனூடாக குறித்த சேவையினை மேலும் வலுப்படுத்துவதுடன் மக்கள் மயப்படுத்தப்பட்ட சேவையுடன் கூடிய நம்பிக்கையான சேவையாக முச்சக்கரவண்டி  சேவையை நடத்தமுடியும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்) தெரிவித்துள்ளார்.

யாழ்மாவட்ட முச்சக்கரவண்டி சங்க தலைமை காரியாலயத்தின் வருடாந்த அரையாண்டு கூட்டம் இன்று (10) அதன் தலைவர் இ.விஜயராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் சிறப்பு அதிதியாக அழைக்கப்பட்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் சார்பாக கலந்துகொண்டு நிழ்வை சிறப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் –

தற்போது குடாநாட்டு மக்கள் மத்தியில் முச்சக்கர வண்டிகள் சேவை மீது சில நம்பிக்கையீனங்கள் காணப்படுகின்றது. அவ்வாறான நிலைமைகளை மாற்றி மக்கள் மயப்படுத்தப்பட்ட பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படத்தக்கூடிய நம்பகரமான சேவையை நடத்துவதற்கு அனைத்து முச்சக்கரவண்டி அங்கத்தவர்களும் அர்ப்பணிப்புடன் உழைக்கவேண்டும். இதனூடாகவே முச்சக்கர வண்டி சேவையின் சேவைத்தன்மையை மக்களிடம் முழுமையாக கொண்டுசெல்ல முடியும்.

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது அதிக பங்களிப்புடன்தான் யாழ்.மாவட்ட முச்சக்கரவண்டி சங்கம் குடாநாட்டில் அமைக்கப்பட்டது. அவர் கொடுத்த அடித்தளம்தான் இன்று பலநூறு அங்கத்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தியதான சங்கமாக வளர்ந்து இச்சங்கம் சேவையாற்றிவருகின்றது.

கடந்தகாலங்களில் எமது செயலாளர் நாயகத்தினால் உங்கள் சங்கத்திற்கு கொடுக்கப்பட்ட பங்களிப்புகள் தற்போதைய ஆட்சிமாற்றத்தால் சற்று தாமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் கடந்த காலத்தில் எவ்வாறு உங்களது பணிகளுக்கு பங்களிப்பு செய்தோமோ அவ்வாறான பங்களிப்பை என்றும் செய்துதர பின்னிற்கமாட்டோம்.

குடாநாட்டிலுள்ள முச்சக்கரவண்டிகள் அனைத்தும் அதன் உரிமையாளர்களது குடும்ப வாழ்வாதாரத்திற்கான முதலீடாக உள்ளது. அந்த முதலீட்டில் பல லீசிங் முறையில் பெறப்பட்டு சேவையிலீடுபடுவதாக அறியமுடிகின்றது.

இத்தகை வாழ்வியலுக்கான. சேவையை செய்யும் உங்களது பணிகளை தவறான வழிகளில் செல்லவிடாது நேர்மையான ஒரு சேவையை செய்வதற்காக அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். இதன்மூலமே உங்களது வாழ்வை வெளிச்சத்திற்கு கொண்டுவரமுடியும் என்பதுடன் கடன்சுமைகளிலிருந்தும் நீங்கள் மீண்டுகொள்ளமுடியும் என தெரிவித்துள்ளார்.

4

3

2

6

7

1

Related posts: