வாழ்க்கை செலவு அதிகரிப்பு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் நீண்ட நேரம் ஆராய்வு – அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!
Thursday, August 26th, 2021முழு உலகும் சுகாதார அவசர நிலையை எதிர்கொள்வதால் மக்கள் மேலும் விலை அதிகரிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசாங்கம் மக்களிற்கு சலுகைகளை வழங்க தீர்மானித்துள்ளது.
ஆனாலும் அரசாங்கத்தின் வருமானம் பெரும் வீழ்ச்சியை கண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் வாழ்க்கை செலவு அதிகரிப்பு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் நீண்ட நேரம் ஆராயப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் முழு உலகையும் பாதித்துள்ளதால் தற்போதைய சூழ்நிலையில் பொருட்களின் விலைகள் குறையும் என மக்கள் எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அரசாங்கம் பொதுமக்களிற்கு பல நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதனடிப்படையில் சீனி பால்மா போன்றவற்றின் மீதான வரியை குறைத்துள்ளது எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|