வாழைப்பழத்தின் விலை அதிகரிப்பு!

Friday, July 13th, 2018

யாழ் குடாநாட்டில் வாழைப்பழத்தின் விலை கடந்த மாதத்தை விட தற்போது சடுதியாக அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் இதன் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது.

தற்போதைய காலநிலை மற்றும் காற்றின் கடுமையான தாக்கத்தால் அனேகமான வாழைகள் ஒருவித நோய்க்கு இலக்காகியும் உள்ளன.

அதனைவிட ஆலயங்களில் மஹோற்சவங்கள் ஆரம்பமாகி நடைபெற்று வருவதாகவும் வாழைப்பழத்தின் பயன்பாடும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில்தான் வாழைப்பழத்தின் விலையும் சடுதியாக அதிகரித்துக் காணப்படுவதாக வாழைச் செய்கையாளர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக வாழைக்குலை விற்பனைக்குப் பெயர் போன இடமான நீர்வேலி வாழைக்குலை விற்பனைச் சந்தையில் கூடப் போதியளவு வாழைக்குலைகள் வந்து சேராததால் அவற்றின் விற்பனை அதிகரித்துக் காணப்படுகின்றது.

இந்தச் சந்தையில் கடந்த திங்கட்கிழமை ஒரு கிலோ கதலி வாழைப்பழம் 50 ரூபா தொடக்கம் 60 ரூபா வரைக்கும் விற்கப்பட்டன.

Related posts:


கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்வோர் மலேரியா தடுப்பூசியை ஏற்றுங்கள் - வைத்திய கலாநிதி ஜெயக்குமரன்!
தேர்தல்முறை மாற்றத்தின் ஊடாக தேர்தல்களை ஒத்திவைப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல - நீதி அமைச்சர் விஜேதாஸ...
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கொல்களத்தை முற்றுகையிட்ட பொலிஸார் - இறைச்சியாக்கப்படவிருந்த பல மாடுகள் மீட...