வாழைச்சேனையில் கைக்குண்டுகள் இரண்டுமீட்பு!

Friday, February 24th, 2017

வாழைச்சேனை – கும்புறுமூலைப்பகுதியில் இரண்டு கைக்குண்டுகள், மீட்கப்பட்டுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்துள்ளார்.

கிரான்கும்புறுமூலை மரமுந்திரகை வீதியில் புதிதாக அமைக்கப்படும் உல்லாச விடுதிவேலையின் போது, காணியைத்துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை, குறித்த இருகைக்குண்டுகளையும் கண்டு, வாழைச்சேனை பொலிஸாருக்கு ,உல்லாசவிடுதியினர் அறிவித்துள்ளனர்.

அதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட வாழைச்சேனை பொலிஸார், இதனைச் செயலிழக்கும் வகையில் மட்டக்களப்பிலுள்ள குண்டு செயலிழக்கும் பகுதியினருக்கு அறிவித்துள்ளனர்.

2134985792bomb

Related posts: