வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 8 பேர் கைது!

Tuesday, April 16th, 2019

மானிப்பாய் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 3 வாள்கள், ஒரு சுழியோடிக் கண்ணாடி மற்றும் 2 உந்துருளிகள் கைப்பற்றப்பட்டன.

குறித்த சந்தேகத்துக்குரியவர்கள் வாள் வெட்டு சம்பவங்களுக்கு செல்லும் போது சுழியோடி கண்ணாடியை அணிந்தவாறு செல்வது அவர்களது கைபேசியில் மீட்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Related posts: