வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஐந்து இளைஞர்கள் கைது!

Wednesday, February 1st, 2017

யாழ். மாவட்டத்தில் அண்மித்த காலங்களில் இடம்பெற்று வரும்  வாள்வெட்டுச்  சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை பிற்பகல் யாழ். குருநகரில் வைத்து ஐந்து இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சந்தேகநபர்களிடமிருந்து கூரிய வாள்கள், கோடரி, கத்தி போன்ற கூரிய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

யாழ்.பொலிஸார் மூன்று நாட்கள்  தொடர்ச்சியாக நடாத்திய தேடுதல் வேட்டையின் விளைவாகவே வாள்வெட்டுடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து 06 வாள்கள், இரண்டு கைக்கோடரிகள், இரண்டு கத்திகள், ஒரு மோட்டார்ச் சைக்கிள், ஒரு கைத்தொலைபேசி, ஒரு முகமூடித் தொப்பி என்பவற்றினையும் பொலிஸார் மீட்டுள்ளனர். கைதான இளைஞர்களை இன்றைய தினம் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

unnamed

unnamed (1)

Related posts: