வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த ஐந்து கைது!

Saturday, December 3rd, 2016

குடாநாட்டில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடய 5இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன்அவர்களிடமிருந்து 2 வாள்களும் வாள்வெட்டுக்கு தயாராகும் புகைப் படங்கள்,வீடியோக்கள் அடங்கிய கை தொலைபேசி ஒன்றையும் பொலிஸா ர் மீட்டுள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பாக பொலிஸார் தெரிவிக்கையில்,

கைது செய்யப்பட்ட 5பேரில் ஒருவரை விசாரணைக்கு உட்படுத்தியதைத் தொடர்ந்து வாள்கள் 2மற்றும் 1 மோட்டார் சைக்கிள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதுடன், 1 ஜபோன் கைதொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளது.குறித்த கைத் தொலைபேசியில் வாள்வெட்டுக்கு தயாராகிவாள்களுடன் நிற்கும் புகைப் படங்கள், வீடியோ பதிவுகளும் மீட்கப்பட்டுள்ளதாகபொலிஸார் கூறியுள்ளனர்.

இவர்கள் சுன்னாகம், உரும்பிராய், திருநெல்வேலி,கோப்பாய் பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களில் ஒருவர் யாழ்.மாவட்டத்தில்பிரபல தனியார் கிறிஸ்தவ பாடசாலையில் உயர்தர வகுப்பு மாணவன் எனவும் பொலிஸார்கூறியுள்ளனர்

bike-vaal-knife-1