வாள்வெட்டுக்குழு அட்ரூழியம் – கிராமசேவகர் அலுவலகம் அடித்து நொருக்கப்பட்டது!

Monday, July 30th, 2018

வண்ணார்பண்ணை கிழக்கு – ஜே 100 கிராம அலுவலகர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டதுடன் அவரது அலுவலகமும் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இன்று நடைபெற்றுள்ளது.
வண்ணார்பண்ணை கிழக்கு ஜே 100 கிராம அலுவலகரின் அலுவலகத்தில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது. வாள்கள் கம்பிகளுடன் பட்டப்பகலில் நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல் இந்த இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
அலுவலகத்துக்குள் புகுந்த கும்பல்இ கிராம அலுவலகரின் கழுத்தில் வாளை வைத்து அச்சுறுத்திய கும்பல் அலுவலகத்திலிருந்த மடிக்கணினி கைபேசி உள்ளிட்ட பெறுமதியான பொருள்களை அடித்து உடைத்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts: