வார இறுதியின் பின்னர் எரிபொருள் தட்டுப்பாடு இருக்காது – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Saturday, March 19th, 2022

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் நிற்பது என்பன வார இறுதியின் பின்னர் தீர்க்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள அனைத்து Ceypecto எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் தற்போது எரிபொருள் இருப்புகள் விநியோகிக்கப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.

தேவையற்ற இடையூறுகள் இன்றி தமக்குத் தேவையான எரிபொருளை மாத்திரம் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

மேலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு போதிய அளவு எரிபொருள் வழங்கப்பட்டுள்ள தாகவும், CPC சேமிப்பு முனையங்களில் போது மான எரிபொருள் இருப்பு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: