வார்த்தைகளால் பதிலளிப்பதை விட செயல்களினால் பதிலளிப்பதே அவசியம் – பிரதமர் மஙிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

இன்றைய உலகம் மற்றும் சமூகம் என்பன மிகவும் வேகமானவை. எனவே, காலத்தை உயர்ந்தபட்சம் உபயோகப்படுத்திக்கொள்ள சிறந்த போக்குவரத்துக் கட்டமைப்பு அவசியமாகும் என்று தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, உலகில் அபிவிருத்தி அடைந்ததாகக் கருதப்படும் நாடுகளின் முன்னேற்றத்துக்கு, முறையான போக்குவரத்து பிரதான காரணியாக மாறியுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அதிவேக நெடுஞ்சாலைகளின் அளவுக்கு விமர்சிக்கப்படும் திட்டம் ஒன்று இந்த நாட்டில் இல்லை எனலாம். விமர்சித்துக்கொண்டே அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களின் விமர்சனங்களுக்கு வார்த்தைகளால் பதிலளிப்பதை விட செயல்களினால் பதிலளிப்பதே அவசியம் என்றும், மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதனிடையே
கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக நாடு மூடப்பட்டிருந்த போதிலும், மனிதாபிமானமிக்க தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி, மக்களின் நலன் கருதி எவ்வாறு தீர்மானங்களை எடுத்தார் என்பதை. நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இதன்போது நினைவு கூர்ந்தார்.
எதிர்வரும் மூன்று வருடங்களில் நாட்டைக் கட்டியெழுப்ப, ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் மக்கள் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி அவர்கள் எதிர்பார்க்கும் இலக்குகளைக் கொண்ட அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் ஏனைய வீதிக் கட்டமைப்புகள் அபிவிருத்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும் என்றும், அமைச்சர் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|